பிரான்ஸில் இருந்து திரும்பிய யாழ் இளைஞனுக்கு நள்ளிரவில் வெட்டி படுகொலை? மேலதிக தகவல்!
19 Nov,2025
பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் நள்ளிவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் நீண்ட காலமாக, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வருடங்களின் முன்பு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்து இளைஞனை பதிவு திருமணம் செய்து சென்ற நிலையில், இளைஞன் மீண்டும் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து இளைஞன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வீட்டிற்கு சற்று தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது