யாழில் இளைஞர்களின் புலம்பெயர்வினால் பாலைவனமாக மாறப்போகும் யாழ்ப்பாணம்
15 Nov,2025
யாழில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டு புலம்பெயர்வினால் யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ள நிலையில் பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதால் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் போன்ற குற்றச்செயல்களால் இளைஞர்களும் படித்த சமூகமும் வடக்கை விட்டு வெளியேறும் நிலை உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் மாபியாக்களின் காரணத்தினால் அங்கிருக்கின்ற மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு பல சவால்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் மக்களை பாதுகாப்பதற்காக அந்த பிரதேசங்களை துரித அபிவிருத்தியை நோக்கி நகர்த்த வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.