உயிர்த்த ஞாயிறு தாக்­குதல்: புதுப்புது சர்ச்சைகளும் உயிர்தெழாத நீதியும்

17 Oct,2025
 

 
 
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான நீதி இன்று வரை உயிர்த்து எழா­ம­லேயே காலம் போய்க் கொண்­டி­ருக்­கின்­றுது. இந்த தாக்­கு­தலின் பின்னால், இருக்­கின்ற மறை­க­ரங்கள், பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என்­பது இன்னும் அறு­தியும் உறு­தி­யு­மாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத சூழலில் அந்­தந்த அர­சாங்­கங்­களின் பாணியில் விசா­ர­ணைகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.
 
இந்தப் பின்­ன­ணியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பான ஐக்­கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிசாம் காரி­யப்பர் ‘எக்ஸ்’ சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்ட கருத்து மற்றும் அத­னை­யொட்­டிய வாதப் பிர­தி­வா­தங்கள் புதி­ய­தொரு சர்ச்­சைஇயை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
 
உயர் பத­விகள் பற்­றிய குழுவின் கூட்டம் பிர­தமர் ஹரிணி தலை­மையில் இடம்­பெற்ற போது அதில் ஆளும் மற்றும் எதிர்­த­ரப்பு எம்.பி.க்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். அந்தக் கூட்­டத்தில் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ரவி சென­வி­ரத்­ன­விடம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணைகள் தொடர்­பாக தான் கேள்­வி­யொன்றைக் கேட்­ட­தாக நிசாம் காரி­யப்பர் கூறி­யுள்ளார்.
 
இதற்குப் பதி­ல­ளித்த ரவி சென­வி­ரத்ன, ‘இந்த தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை கண்­டு­பி­டித்து விட்­டடோம்’ என்று கூறி­ய­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிசாம் காரி­யப்பர் தனது எக்ஸ் தளத்தில் பதி­விட்­டுள்ளார்.
 
இதற்­கி­டையில் பிர­தான சூத்­தி­ர­தாரி என்ற விட­யத்­தோடு இணைந்­த­தாக இந்­தி­யாவின் பெயரும் சில இடங்­களில் உச்­ச­ரிக்­கப்­ப­டு­வ­தாக தெரிகின்றது. சமூக வலை­த­ளங்­களில் வெளி­யான இவ்­வி­டயம் அர­சி­ய­ல­ரங்கில் மட்­டு­மன்றி சர்­வ­தேச அரங்­கிலும் பல்­வேறு கோணங்­க­ளி­லான அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது,
 
இந்­நி­லையில், பொலிஸ் திணைக்­களம் மறுப்பு அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இந்­திய இருந்­த­தாக ரவி சென­வி­ரத்ன எந்த இடத்­திலும் குறிப்­பி­ட­வில்லை என மேற்­படி அறிக்­கையில் அழுத்­த­மாகக் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
 
இந்­நி­லையில், இது தொடர்­பாக நிசாம் எம்.பி.யின் பிந்­திய நிலைப்­பாட்டை அறி­வ­தற்­காக எடுக்­கப்­பட்ட முயற்சி பய­ன­ளிக்­க­வில்லை.
 
இக்­கு­ழுவில் உண்­மையில் இவ்­வா­றான கருத்து ஒன்றை பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் தெரி­வித்­தாரா என்­பது நமக்குத் தெரி­யாது. குழுவில் இருந்த பிர­தமர், அமைச்­சர்கள் மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கே அது தெரியும்.
 
அதேபோல், அவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­தாலும் இவ்­வா­றான விட­யங்­களை விதி­மு­றை­களின் படி அல்­லது தார்­மீ­கத்தின் படி வெளி­யிட முடி­யுமா என்­பது நம்மை விட சட்டம் அறிந்த காரி­யப்­ப­ருக்கும் அர­சாங்­கத்­திற்கும் தெரியும்.
 
எனவே இவ்­வி­ட­யத்தை மக்கள் ஆய்வு செய்து குழம்பத் தேவை­யில்லை. எது எவ்­வா­றி­ருப்­பினும், இந்த அர­சாங்­க­மா­வது விரை­வாக பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­டு­ பி­டித்து, தண்­டனை வழங்கும் என்று எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்கும் மக்கள் மத்தில் இந்த தகவல் ஒரு­வித சல­ச­லப்­பையும் கவன ஈர்ப்­பையும் ஏற்­டுத்­தி­யுள்­ளது எனலாம்.
 
இலங்கை வர­லாற்றில் நடந்த மிகப் பெரிய பயங்­க­ர­வாத தாக்­கு­த­லாக 2019 ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்கள் உள்­ளன. இந்த தாக்­கு­தலில் 250 இற்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­ட­துடன் அதற்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர். அதை­விட அதி­க­மானோர் மன­நிலை ரீதி­யா­கவும் உற­வு­களை இழந்தும் பாதிக்­கப்­பட்­டனர்.
 
கத்­தோ­லிக்க இறை­ வ­ழி­பாட்டுத் தலங்­க­ளையும் நட்­சத்­திர ஹோட்டலையும் இலக்கு வைத்து சஹ்ரான் கும்­பலால் நடத்­தப்­பட்ட இந்த தாக்­கு­தலால் உயிர்­களை இழந்­தது கத்­தோ­லிக்க மக்கள் என்­றாலும், சட்­டத்­தி­னாலும், இன­வா­தத்­தி­னாலும் கணி­ச­மான இழப்­புக்­களைச் சந்­தித்­தது முஸ்­லிம்­கள்தான் என்­பதை குறிப்­பிட்­டாக வேண்டும்.
 
கத்­தோ­லிக்­கர்­க­ளையும் வெளி­நாட்­ட­வ­ர்களையும் படுகொலை செய்து இலங்­கையில் அமைதி இன்­மையை ஏற்­ப­டுத்­தி­ய­துடன், அதற்கு காரணம் முஸ்­லிம்­கள்தான் என்ற கற்­பிதம் சொல்­லப்­பட்டு முஸ்­லிம்­கக்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் இடையில் ஒரு முரண்­நிலை திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­ததை நாம் இன்னும் மறந்து விட­வில்லை.
 
ஆனால், சில காலத்­திற்­குள்­ளேயே இந்த தாக்­கு­தலை முஸ்லிம் சமூகம் நடத்­த­வில்லை என்­பதும், முஸ்­லிம்­க­ளுக்குள் இருந்த தீவிர போக்­குள்ள, பயங்­க­ர­வாத குழு­வொன்றைப் பயன்­ப­டுத்தி, ஆட்சி மாற்­றத்­திற்­காக அல்­லது அது­போன்ற பல­மான ஒரு கார­ணத்­திற்­காக உள்­நாட்டு, சர்­வ­தேச சக்­திகள் இந்த சதியை தீட்­டி­யுள்­ளன என்ற விடயம் தேநீர்க்கடை­களில் கூட பேசப்­ப­டு­கின்ற தக­வ­லாக மாறி­விட்­டி­ருக்­கின்­றது.
 
இந்த தாக்­குதல் நடந்த போது ஆட்­சியில் இருந்த மைத்­திரி – ரணில், இதனைப் பயன்­ப­டுத்தி ஆட்­சிக்கு வந்த கோட்­ட­பாய, அதன் பின்னர் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க என எந்த ஆட்­சி­யா­ளரும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய உண்­மையை நூறு வீதம் வெளிக் கொணர்ந்து, பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களை தண்­டிக்­க­வில்லை.
 
உயி­ரி­ழப்­புக்­களைச் சந்­தித்த கத்­தோ­லிக்க மக்களுக்கு மட்­டு­மன்றி, இத்­தாக்­கு­தலின் பின்னர் கைதுகள், கெடு­பி­டிகள் மற்றும் இன­வாத நெருக்­க­டி­களால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்கும் இன்னும் நீதி நிலை­நாட்ப்­ப­ட­வில்லை.
 
இப்­ப­டி­யான ஒரு சூழ­லி­லேயே, ‘குற்­ற­வா­ளி­களை குறு­கிய காலத்­திற்­குள்ளேயே கண்­டு­பி­டிப்போம்’ என்ற வாக்­கு­று­தி­யோடு என்.பி.பி. அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்­ன­ரான விசா­ர­ணை­களில் பல திருப்­பங்கள் இயல்­பா­கவே ஏற்­பட்­டன. பல முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.
 
இப்­ப­டி­யான ஒரு சூழ்­நி­லை­யி­லேயே இப்­போது நிசாம் காரி­யப்பர் எம்.பி.யின் கருத்து சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் போன்ற விவ­கா­ரங்­களில் இப்­ப­டி­யான சர்ச்­சை­களும், புதுப்­புது தக­வல்­களும், அதனை மையப்­ப­டுத்­திய விமர்சனங்களும் வரு­வது நமக்கு புதி­தல்ல.
 
முன்­ன­தாக, தாக்­கு­த­லுக்கு முன்னர் அரச உயர் மட்­டத்­தினர் பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்­கையை சரி­யாக கணக்­கெ­டுக்­காமல் செயற்­பட்ட விதம், சாரா ஜெஸ்மின் தப்பிச் சென்ற விவ­காரம், அசாத் மௌலா­னாவின் கதைகள், பிள்­ளை­யானைச் சுற்றி வெளி­வந்த தக­வல்கள் என கடந்த ஆறு வரு­டங்­களில் எத்­த­னையோ சர்ச்­சை­களை இலங்கை மக்­க­ளா­கிய நாம் கடந்து வந்­தி­ருக்­கின்றோம்.
 
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்­றிய விசா­ர­ணை­களை முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களும் முன்­கொண்டு செல்­வ­தா­கவே காண்­பித்­தனர். ஆனால், ஒரு எல்­லைக்கு மேல் அது நகரவில்லை.
 
ஆனால், இப்­போது ஆட்­சியில் இருப்­பது புத்தம் புதிய ஆட்­சி­யா­ளர்கள். இங்கே யாரையும் காப்­பாற்ற வேண்­டிய தேவையோ, யாரு­டைய கட்­ட­ளைக்கும் அடி­ப­ணிய வேண்­டிய நிர்ப்­பந்­தமோ என்.பி.பி. அர­சாங்­கத்­திற்கு கிடை­யாது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்.பி.பி. ஆட்சியிலேயே அதிகமுள்ளது என்று மக்கள் திடமாக நம்புகின்றார்கள்.
 
எனவே தேவையற்ற விவகாரங்கள், தகவல்கள், கதைகள், சர்ச்சைகளால் நீதி விசாரணைகள் தாமதப்படுத்தப்படக் கூடாது. தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசாங்கம் முன்னோக்கி நகர வேண்டும்.
 
காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று கூறுவார்கள். எனவே, முன்னைய அரசாங்கங்களைப் போல இந்த அரசாங்கமும் காரணங்களையும் விளக்கங்களையும் சொல்லிக் கொண்டே இருக்காமல், பிரதான சூத்திரதாரிகள் உள்ளடங்கலாக அனைத்து தரப்பினரையும் கண்டறிந்து கூடிய விரைவில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies