*
இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது.
13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு.
ஆனால் ---
ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை.
சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார்.
இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்...
ஆகவே ------
A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்?
B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்?
அப்படியானால் ----
13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா?
இல்லையே?
1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே?
2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே?
இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது.
நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது...
அது மாத்திரமல்ல ---
ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்?
அத்துடன் ----
ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது.
இந்த மடைமாற்றங்கள் ---
ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்?
புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது.
ஆகவே -----
ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்-----
-------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------
அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்?