சாவகச்சேரியில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இடித்தழிப்பு : மீண்டும் கட்டித்தர மறுக்கும் நபர்
05 Oct,2025
சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது.
அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை.
தூபியை கட்டித் தர முடியாது
அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.