யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் ; மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி
25 Jul,2025
கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியாக வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாதப் படுகொலை புகைப்படக் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வு முழுவதும் அமைதியான மற்றும் மரியாதையான சூழலில் நடைபெற்றது