திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைத் தவிசாளராக தன்ராஜை தமிழரசுக் கட்சி பிரேரித்தது!
12 Jun,2025
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளராக துரைராஜா தன்ராஜ் என்பவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரேரித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்காக தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு துரைராஜா தன்ராஜ் தவிசாளராக முன்மொழியப்பட்டிருப்பதாக குகதாசன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் 6 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் திருகோணமலை மாநகரசபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச சபைகளுக்குரிய தலைவர்கள் தொடர்பிலான பெயர் பட்டியல் மத்திய குழுவினால் திருகோணமலை மாவட்டக் குழுவிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.