யாழ். வந்திறங்கிய சரிகமப பிரபலங்கள் : சிறப்பிக்க உள்ள இசை நிகழ்ச்சி
02 Jun,2025
ஜீ தமிழ் (ZEE Tamil) தொலைக்காட்சியின் சரிகமப சீசன் - 03 புகழ் புருசோத்தமன் மற்றும் அக்சயா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வந்துள்ளனர்.
யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக இன்று (02.06.2025) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்பிப்பதற்கு இவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
ஜீ தமிழ் சரிகமப சீசன் 04 முடிவடைந்துள்ள நிலையில் தற்போது சீசன் 05 ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, முன்னதாக ஈழத்தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இலங்கை கலைஞர்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும் TRP க்காக மக்களின் உணர்வுகளை விற்பனை செய்வதாகவும் சமூகத்தில் அதிகம் பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.