கனடா நாடாளுமன்றத் தேர்தல்:போட்டியிட்ட 6 ஈழத் தமிழரில் 3 பேர் வெற்றி- மீண்டும் அமைச்சர்களாகும் இருவர்
29 Apr,2025
கனடா நாடாளுமன்றத்தில் ஆளும் லிபரல் கட்சி, ஆட்சியை 4-வது முறையாக தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் ஈழத் தமிழர்கள் 6 பேர் போட்டியிட்டு 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 2 பேர் லிபரல் ஆட்சியில் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பிரதமர் மார்க் கார்னே தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. லிபரல் கட்சி, 4-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கிறது.
லிபரல் கட்சியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துச் செய்தியில், "கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
கனடாவின் இந்த தேர்தலில் அந்நாட்டில் குடியேறிய ஈழத் தமிழர்கள் 6 பேர் போட்டியிட்டனர். லிபரல் கட்சியின் வேட்பாளர்களாக 3 பேரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர்களாக இருவரும் பசுமை கட்சியின் வேட்பாளராக ஒருவரும் களம் கண்டனர்.
லிபரல் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட Oakville East அனிதா ஆனந்த்,
Scarborough Guildwood-Rouge Park தொகுதியின் ஹரி ஆனந்த சங்கரி மற்றும் Pickering-Brooklin தொகுதியின் யுவனிதா நாதன் ஆகிய மூவருமே வெற்றி பெற்று எம்பிகளாக்கி உள்ளனர். இவர்களில் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்த சங்கரி இருவரும் மீண்டும் அமைச்சர்களாகக் கூடும் என்கின்றன கனேடிய தமிழ் வட்டாரங்கள்.
கன்சர்வேட்டி கட்சியின் வேட்பாளராக Markham-Stouffville தொகுதியில் களம் கண்ட நிரான் ஜெயநேசன், Markham -Thornhill தொகுதியில் களம் கண்ட லியோனல் லோகநாதன், Etobicoke வடக்கு தொகுதியில் பசுமை கட்சி வேட்பாளராக களம் கண்ட சருன் பாலரஞ்சன் ஆகிய மூவருமே தோல்வியைத் தழுவினர்