பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளதோடு, அதில் 1.4 சதவீதமானோர் அதாவது 1,37,876 பேர் ஆங்கில அறிவு அற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 27 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாகவும், எனவே , வெளிநாட்டவர்களை நாடுவதற்கு பதிலாக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நிறுவன முதலாளிகளை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் :
வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது.
வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது
தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது
ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது)
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது
மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.
இப்போ எல்லாம் ஆங்கில சோதனை பாஸ்பண்ணினால்தான் விசா கொடுக்கிறார்கள். விதிவிலக்கு பெற கடும் காரணங்கள் காட்ட வேண்டி வரும்.
ஆனால் பலவருடங்களாக இந்த விதிகள் இறுக முதல் உள்ளே வந்து வாழ்பவர்கள் கூட மொழியை படிக்காமல் இருக்கிறார்கள்.
இதில் பாகிஸ்தானி, பங்களாதேசி, சோமாலியர்தான் அதிகம்.
எங்கட ஆக்கள் தட்டு தடுமாறி பேசும் அளவிலாவது இருப்பார்கள். ஆனால் டாக்டர், சோசல் காசு, இமிகிரேசன், பொலிஸ் என்றால் மொழிபெயர்பாளர் உதவி தேவைப்படும்.
போக, போக இது மாறிவிடும்.
ஆனால் சட்டவிரோத குடியேறிகளை ஆங்கில சோதனைக்கு உட்படுத்த முடியாது. அவர்களாக படித்தால்தான் உண்டு.