சபையில் இடைநிறுத்தப்பட்ட சாணக்கியன் : சபாநாயக்கரால் வெடித்த பாரிய சர்ச்சை
04 Mar,2025
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியணை சபாநாயக்கர் இடைநிறுத்தியமையினால் சபையில் வாக்குவாதம் வெடித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதையதில் இருவர் படுகாயமடைந்தனர்.
அத்தோடு, நேற்று (03) மட்டக்களப்பு - கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் பலியாகியிருந்தார்.
இந்தநிலையில், இது தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) கருத்து தெரிவிக்க முற்பட்ட நிலையில், இடையில் நிறுத்திய சபாநாயக்கர் “இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம்” என தெரிவித்தார்.
அத்தோடு, இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல எனவும் சபாநாயக்கர் தெரிவித்தமையினால் சபையில் பாரிய வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.