நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்து புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் ;

23 Dec,2025
 

 
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்துக்கு வழங்கிய உத்தரவாதம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மகிழ்ச்சி அடைவதாக அறிவித்துள்ளது.
 
அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
 
மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதி செய்யும் நாட்டின் இறைமை மற்றும் நிலைபெயர் தன்மையை உறுதி செய்து கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்து புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதின் அவசியத்தை வலியுறுத்தி சமூக நீதிக்கான தேசிய இயக்கம் 2012 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டது.
 
இது போன்ற நிலைப்பாட்டை நாம் மேற்கொண்டது தனிநபரை இலக்கு வைத்து அல்ல, இலங்கையின் ஜனநாயகத்திற்கு தடையாகவும் சிறந்த அரசியல் கலாச்சாரத்திற்கு பதாகமாக இருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தடைகளை கருத்தில் கொண்டு என்பதை தெரிவிக்கிறோம்.
 
 
1978 ஆம் ஆண்டு முதல் இலங்கை தனிநபரின் ஆளுகைக்கு உட்பட்டதன் விளைவுகளை கண்கூட கண்டுள்ளோம். அவ்வாறான தனிநபர் ஆளுகையை உருவாக்கும் அரசியல் அமைப்பும் அதை சுற்றி கூடும் மக்கள் அதிகாரமும், வேற்றுக் குழுகளும் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
 
மேலும் பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்தினால் மேற்கொள்ளும் தாக்கங்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் புரிந்து கொண்டுள்ளோம்.
 
இதுபோன்ற துர்பாக்கிய நிலைகளை குறைப்பதற்கு இந்தியா, பிரிட்டன் போன்ற ஜனநாயகத்தை பின்பற்றும் வலுவான அரசுகளும் நடைமுறைப்படுத்தும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் அரசியலமைப்பை நோக்கி பயணிக்க வேண்டியதன் தேவையை புரிந்து கொண்ட நாம், கூட்டு ஒருமைப்பாட்டுக்கு உயரிய சந்தர்ப்பம் கிடைக்கும் அமைச்சரவை அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கின்றோம்.
 
மேலும் இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பை அறிமுகம் செய்யும்போது நாட்டின் மக்கள் பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் அனைத்து தரப்புகளின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்வது அத்தியாவசியம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.
 
 
இதன்போது கடந்த ஆட்சி காலங்களில் முன்வைக்கப்பட்ட லால் விஜயநாயக்க குழுவின் அறிக்கையை பயன்படுத்தலாம். அது போன்ற ஜனநாயக முறை சார் பிரவேசத்திற்கு அமைவாக புதிய அரசியல் அமைப்பை அரசு முன்னெடுக்குமாயின் அதற்கு ஆதரவளிக்க எமது அமைப்பு உள்ளிட்ட ஏனைய சிவில் சமூகங்களும் முன்வரும் என்பதை உறுதி செய்ய முடியும் . இது போன்ற ஒரு முயற்சிக்கு அரசாங்கம் பிரவேசிக்குமாயின் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய கௌரவத்தை உருவாக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகி ன்றேன் என்றுள்ளது.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies