இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுவரை 4286 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது
19 Dec,2025
'இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம்' நிதியத்துக்கு இதுரையில் 4286 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதற்கு முன்னர் 3400 மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதி கிடைக்கப் பெற்றிருந்தது. தற்போது அந்த தொகை 4286 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன் பெறுமதி 13.8 மில்லியன் டொலராகும். இதில் வெளிநாடுகளிலிருந்து மாத்திரம் சுமார் 6 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகை பொருள் மற்றும் சேவை ஒத்துழைப்புகளுக்கு அப்பால் கிடைக்கப் பெற்றதாகும்.
இதுவரையில் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உதவிகள் பொருட்களாகவும், சேவையாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 43 நாடுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பூட்டான், இத்தாலி, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூசிலாந்து, மாலைத்தீவு, சவுதி, பிரான்ஸ், கொரியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. இதேவேளை ஸ்ரீலங்கள் எயாலைன்ஸ் கடன் மறுசீரமைப்பிற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.