அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக உயர்வு ; 370 பேர் மாயம்!
30 Nov,2025
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு முதலான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 334 பேர் உயிரிழந்ததோடு 370 பேர் காணாமற்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த 25 மாவட்டங்களிலும் இயற்கை அனர்த்தத்தினால் மொத்தமாக 309 607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாட்டில் அனர்த்த பாதுகாப்பு முகாம்களில் 196,790 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.