அரநாயக்கவில் சரிந்து விழுந்த மலைத்தொடர்! முற்றாக மூடப்பட்ட கண்டி கொழும்பு வீதி
30 Nov,2025
கொழும்பு கண்டி பிரதான வீதியின் யக்கல ஆயுர்வேதவிற்கு அருகாமையில் உள்ள பாலத்தின் நடுப்பகுதி கீழிறங்கியுள்ளது.
எனவே தற்காலிகமாக யக்கல- திஹாரிய இடையிலான பாதையை மூடவேண்டியமையால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பிரதியமைச்சரும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அரநாயக்கவில் தற்போது பாரிய மண்சரிவு சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள அம்பலக்கந்த பகுதியிலேயே பாரிய மலைத்தொடர் தற்போது சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கண்டி மாவட்டத்தின் யக்கல பகுதியில் பாலம் உடைந்து விழுந்ததால் கொழும்பு கண்டி பிரதான பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.