மன்னார் – பரப்புக்கடந்தான், அடம்பன் தாழ்வுநிலப் பகுதி மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்
29 Nov,2025
மன்னார் கட்டுக்கரை குளத்தில் வான் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், குளத்தின் வான் பகுதி பாதிக்கப்படும் ஆபத்து நிலவுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பரப்புக்கடந்தான் மற்றும் அடம்பன் தாழ்வுநிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், நிலைமை தீவிரமானால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவல் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்திலிருந்து தேவையான அறிக்கைகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்குச் சென்றடைந்துள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பை முன்னிருப்பில் வைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் விரைவில் உயர வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.