ச்சரிக்கை ! களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம்
28 Nov,2025
நள்ளிரவு 12 மணியின் பின்னரான 4 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கைக்கு அருகில் உள்ள கொலன்னாவை, கொழும்பு, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் தீவிரமடையக்கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, மகாவலி கங்கை, அட்டுளு கங்கை, மகா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் தெதுரு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டு