எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்: இலங்கை உள்ளிட்ட நாடுகளில் விமானப் பணியாளர்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு
13 Nov,2025
மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் விமான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இலங்கை ஆட்சேர்ப்பு அமர்வில் பங்கேற்க தகுதி பெற ஒன்லைனில் விண்ணப்பிக்குமாறு விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆட்சேர்ப்பு அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி காலை 09.00 மணி முதல் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.