சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை அறிமுகப்படுத்தும் ப்ரீபெய்ட் அனுமதி சீட்டுக்கள்
26 Oct,2025
அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் போக்குவரத்து மற்றும் நுழைவு அனுமதிச்சீட்டுக்கள்; இரண்டையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த (ப்ரீபெய்ட்) முன்கூட்டியே செலுத்தும் அனுமதி சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளதாக வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுமதிச்சீட்டுக்களை இணையத்தில் கொள்வனவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
விலை நிர்ணயம்
குறித்த அனுமதிச்சீட்டுக்கள், வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற பல பிரிவுகளில் வழங்கப்படும். அத்துடன், பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.
தேசிய பூங்காக்கள், பாரம்பரியம் மற்றும் கலாசார முக்கோண தளங்கள் மற்றும் இதே போன்ற இடங்கள் இந்த அனுமதிச்சீட்டுப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்த ஆண்டு இதுவரை 1.8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
அதே நேரத்தில் எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 700,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.