ஊழல் குற்றச்சாட்டு மகிந்தா ராஜபக்சே அண்ணன் மகன் கைது
07 Aug,2025
ஊழல் வழக்கில் மகிந்தா ராஜபக்சேவின் அண்ணன் மகனும் முன்னாள் அமைச்சருமான சசீந்திரா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டங்களையடுத்து அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். முன்னாள் அதிபர் மகிந்தாவின் 2 மகன்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகிந்தாவின் மூத்த அண்ணனும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சேவின்
மகன் சசீந்திரா ராஜபக்சே மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான சசீந்திரா ராஜபக்சே அரசாங்க நிலத்திற்கு இன்னொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை வரும் 19ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுரகுமார ஆட்சிக்கு வந்தபிறகு கைதுசெய்யப்பட்ட முதல் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் சசீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.