தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய ஏர்பஸ் விமானம் !
03 Jun,2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் நாளை 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.
பிரான்ஸிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கவுள்ளது.
மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறுித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.