அநுரவை சந்தித்த மோடிக்கு விஜயமுனி என்ற கடற்படை அதிகாரி தாக்க முற்பட்ட சம்பவம்
07 Apr,2025
கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் தற்போது ஆட்சியில் இருக்கக் கூடிய அநுரகுமார திசாநாயக்கவினுடைய தலைமைக் கட்சியான ஜே.வி.பியினது 2ஆவது பெரிய கிளர்ச்சி இடம்பெற்றது.
அந்த கிளர்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான ஜே.வி.பி இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.
அதேகாலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி மீது, இராணுவ அணிவகுப்பு மரியாதையில் விஜயமுனி என்ற கடற்படை அதிகாரி தாக்க முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்தது.
இந்தநிலையில் குறித்த நபர் ஜேவிபி இனுடைய பின்னணியை சேர்ந்தவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அக்காலப்பகுதியிலேயே குறிப்பாக ஜேவிபியினுடைய ஊடுருவல் இலங்கையின் முப்படைகளிலும் ஆழமாக இருந்ததாகவும் அதனடிப்படையில் அவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனவும் இலங்கையினுடைய உளவுப்பிரிவு ஒரு செய்தியை கசிய விட்டிருந்தது.
ஏனெனில், இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக இவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த வரலாற்றுப் பின்னணியில் இன்றைக்கு 37 வருடங்களுக்குப் பின்னர் அதே ஜே.வி.பியினரோடு 7 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இது இந்தியா தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அநுரவினுடைய சித்தாத்தங்கள் சீனாவோடு நெருங்கி காணப்படுவதால் இந்தியாவிற்கு ஒரு பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.