வேறொருவரின் எரிந்த வீட்டுக்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ
02 Apr,2025
அரகலயவின் போது செவனகலவில் மற்றொரு நபரின் வீடு எரிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற்ற ராஜபக்ச உறுப்பினர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க புத்தளவில் திங்கட்கிழமை (31) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் புத்தள கண்காட்சி மைதானத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இழப்பீடு பெற்ற ராஜபக்ஷ, எரிந்த வீட்டின் உரிமையாளர் அல்ல என்று கூறிய ஜனாதிபதி அனுர திசாநாயக்க, நிலப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும், வீட்டுப் பத்திரம் வேறு பெயரில் இருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும், இழப்பீட்டைப் பெற்றவர் ஒரு ராஜபக்ஷ என்று ஜனாதிபதி வெளிப்படுத்தினார். தொடர்புடைய அறிக்கை சமீபத்தில் தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.