2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பின்வரும் விடயங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி, அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல்.
புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டம்.
புதிய சுங்க சட்டத்தை முன்வைக்க நடவடிக்கை.
வருமானத்தை அடிப்படையாக கொண்டு அரச காணிகள் முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.
அரச – தனியார் கூட்டாண்மைக்கு புதிய சட்டம். வரவு செலவு திட்டம்
தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒடுக்கீடு.
கொழும்பு துறைமுகத்தின் வடக்கு – மேற்கு முனைய அபிவிருத்திகளுக்காக ஒரு மாதத்துக்குள் யோசைனைகள் கோரப்படும்.
பல்நோக்கு பொருள் விநியோக மத்திய நிலையமாக வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் முனையம் நிர்மானிக்கப்படும்.
துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கொழும்பு துறைமுகம் - பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.
இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில் அறிமுகம்.
கட்டங்கட்டமாக நாணயத்தாள் பாவனையை குறைக்க திட்டம்.
தொடர்பாடல் தொழில் நுட்பத்தினூடான வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சுற்றுலாதுறை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சுற்றுலாதுறை சார் இடங்களுக்கு புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஜப்பான் நிதியுதவியுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.