14 இந்திய மீனவர்கள் கைது
09 Feb,2025
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின் பின் 14 மீனவர்களும் விசைப்படகுகளுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.