அநுர அரசில் தொடரும் அதிரடிகள்! லஞ்சம் வழங்கிய வர்த்தகர்களின் பரிதாப நிலை
28 Dec,2024
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணிக்கான நட்டஈடு வழங்குவது தொடர்பான செயற்பாட்டுக்கு 09 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட தனது உறவினரின் காணிக்கான நட்டஈட்டை துரிதப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.
மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி நேற்று 04 மணித்தியாலயத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
மோசடியான முறையில் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பான சம்பவம் தொடர்பிலேயே வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நேற்று காலை 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த அவர், பிற்பகல் 1.30 மணியளவில் வெளியேறியுள்ளார்.
குற்ற புலனாய்வு திணைக்களம்
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கு ஆஜராகவில்லை.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவையும் அடுத்த வருடம் ஜனவரி 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
லஞ்சத்திற்கு எதிராக நடவடிக்கை
சமகால அரசாங்கத்தில் லஞ்சம் பெறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.