ரஷ்ய அதிபர் புடினுடன் கைகோர்க்க விரும்பும் ஜனாதிபதி அனுர !
27 Dec,2024
ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் பகிர் அம்சா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர்விளாடிமிர் புட்டினிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை ஜனாதிபதி பிரிக்சில் சேர்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பிரிக்ஸின் ஏனைய நாடுகளிற்கும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்,சாதகமான பதிலிற்காக காத்திருக்கின்றோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபரில் ஜனாதிபதி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.