பானை கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச்சென்ற முதலை
26 Dec,2024
களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரையே இவ்வாறு முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பானை கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச்சென்ற முதலை | Crocodile Drags Away Womankalurata
களுத்துறை கொஹொலன பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் படகு மூலம் பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.