ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயம் குறித்து வெளியான தகவல்
08 Dec,2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான உயர்மட்ட குழு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு (India) செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன்
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன்
விஜயத்தில் பங்கேற்கவுள்ளோர்
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் இந்திய விஜயம்
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் பின்னரான அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி (Delhi) விஜயத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு விஜயம் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.