யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்... 60 ஆயிரம் பேருக்கு நேர்ந்த நிலை!
28 Nov,2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 161வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதேவேளை, 7 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 8 சிறு மற்றும் மத்தி முயற்சிகள் 7 பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தால் ஒருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
77 பாதுகாப்பு முகாம்களில் இரண்டாயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 7271பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.