அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
31 Oct,2024
அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட சமூகங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , அமைச்சர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் வறுமையை ஒழிப்பதிலேயே அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனவும் தொிவித்துள்ளாா். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தொிவித்துள்ளாா்.
மேலும் தங்களுக்கு மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை எனத் தொிவித்த அவா் தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நவம்பர் 14 க்குப் பிறகு புதிய அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை வெளிப்படுத்திய ஜனாதிபதி “இந்த அரசாங்கம் தனது பணிகளைச் செய்வதற்கு கிராமங்களைச் சென்றடைய வேண்டும் எனவும் கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுவதே தன் முன்னால் உள்ள மிக முக்கியமான பணி எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டாா்.