கண்டியில் கைதான ரஷ்ய தம்பதியர்: காவல்துறை விசாரணை
27 Oct,2024
குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த தம்பதியரை கண்டி சுற்றுலா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை ஹந்தானை பகுதியில் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 39 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதுடைய பெண் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட தம்பதியர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.