வெள்ளத்தால் மேல் மற்றும் தென் மாகாண வீதிகள் முடக்கம்
12 Oct,2024
மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அந்தவகையில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பண்டாரகம - கொலமதிரிய, பாலிந்தநுவர - பதுரலிய, பரல்லாவிட்ட - அவிட்டாவ, களுத்துறை - மத்துகம, புலத்சிங்கள - மொல்கா ஆகிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் மினுவாங்கொடை, கட்டான, ஹன்வெல்ல, கடுவெல, கொலன்னாவ, பன்னல, ஹோமாகம உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.