கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது
06 Oct,2024
கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹன்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டவர்கள் ஆவர்.
தடயவியல் பரிசோதனைக்காக 499 மொபைல் போன்கள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கணினிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது