வெளிநாட்டு தூதரகங்களில் இடம்பெறும் மோசடி - அநுர எடுக்கவுள்ள நடவடிக்கை
01 Oct,2024
வெளிநாடுகளிலுள்ள தூதுவரலாலயங்களில் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் பணியாற்றி வருகின்றமை தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலுள்ள தூதுவரகங்களில் இவ்வாறு பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டீ சில்வா, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் மிகவும் நெருக்கமான உறவினர்கள் பணியாற்றுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான பலர் தூதரகங்களிலுள்ள பல்வேறு பணிகளில் கடமையாற்றி வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களின் செயற்பாடுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.