ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார்மயப்படுத்தப்போவதில்லை - தேசிய மக்கள் சக்தியின் தலைவர்
30 Sep,2024
ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடவுள்ளது.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் அவசியத்தை கருத்தில் கொள்ளும்போது இலங்கையின் தேசிய விமானசேவையான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நாட்டிற்கு சொந்தமானதாக காணப்படவேண்டும் என அரசாங்கம் கருதுவதாக தேசிய மக்கள் சக்தியி;ன் பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார்மயப்படுத்தப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதன் முகாமைத்துவத்தினை சீர்செய்வதற்கான திட்டமொன்று முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.