நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு
21 Sep,2024
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு | Curfew Implemented In Sri Lanka
பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக மேலதிக தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது.