இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
21 Sep,2024
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களத்தில் உள்ளனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச உள்பட 38 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் வாக்குப்பதிவில் ஒருகோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். தேர்தலில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.