இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் யார் என்பது தொடர்பான தகவலை இந்திய ஜோதிட நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வாழ் இந்திய ஜோதிடர்
கதிர் சுப்பையா என அடையாளப்படுத்தப்படும் இந்திய ஜோதிடர் அமெரிக்காவில் இருந்து செயல்படும் தனது யூடியூப் சேனலில் கணிப்பு ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
அதில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் ஜோதிட நிலையை கருத்திற்கு கொண்டு பகுப்பாய்வு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவின், ஜாதகத்தில், வியாழன் வலுவிழந்து, சந்திரனுடன் இணைந்து, சக்திவாய்ந்த யோகத்தை உருவாகியுள்ளது.
2002 வரை அவர் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் 2004 முதல் நல்ல பலனைத் தரவில்லை. ஆனால் இப்போது அவருக்கு நல்ல பலன்களைத் வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வேட்பாளர்களும் மகர ராசி
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்த சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில், வியாழன் சந்திரன் மற்றும் சனியால் உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவருக்கும் சாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி அனுரகுமார திஸாநாயக்கவின் ஜாகத நிலைக்கு அமைய, கடந்த சில வருடங்களாக சனி மகாதிசையை ஆரம்பித்து, சனியும் ராகுவும் அவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இணைந்துள்ளன.
மேலும் அவரது ஜாதகத்தில் வியாழன், செவ்வாய் மற்றும் செவ்வாய் சேர்க்கை ஒரு சக்திவாய்ந்த கேந்திர யோகம் மற்றும் சிறந்த யோகத்தை உருவாக்குகிறது.
மூன்று வேட்பாளர்களும் மகர ராசியைச் சேர்ந்தவர்கள் என்பதால், முடிவுகளை கணிப்பது மிகவும் கடினமாகும். இந்த வேட்பாளர்களுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கலாம்.
தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவோரு வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளை பெற மாட்டார்கள் என்றும், அதற்கமைய இரண்டாவது சுற்றில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இளம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என ஜோதிடர் கதிர் சுப்பையா தனது கணிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.