சிறைச்சாலை அதிகாரியின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
11 Aug,2024
சிறைச்சாலையின் ஜெயிலர் ஒருவரால் மதின்னாகொட ராஜகிரிய வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரி 56 ரக துப்பாக்கி, ஒரு மகசீன், 350 தோட்டாக்கள், மைக்ரோ ரக பிஸ்டல் துப்பாக்கி, மகசின், 9எம்எம் ரக 50 துப்பாக்கி தோட்டாக்கள், 5.56 ரக 8 ரவை தோட்டாக்கள், போதை பொருட்கள், 700 மி.கி கஞ்சா, 200 மி.கி குஷ் போதை மருந்து, அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் வெளியான தகவல்
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விளைவாக, கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறைக்காவலர் வைத்திருந்த ஏனைய துப்பாக்கிகள் பற்றிய தகவல்கள் வெளியாகின.
அதன்படி, சிறைக்காவலரின் வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.