இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு
17 Jun,2024
இலங்கை-இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கு சாத்தியக்கூறு ஆய்வு பணி விரைவில் நிறைவடையும் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. தொலைவுக்கு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தரைவழியாக பயணிப்பதற்கான ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன எனவும் கூறினார்.