சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட மிளகு மற்றும் உப்பு உணவுப் பொருட்கள்
11 Jun,2024
‘சிறிலங்கன் எயார்லைன்ஸ்’ (SriLankan Airlines) கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக சாட்சிகள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பயணிகளின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே அவற்றை வழங்குவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த இரண்டு பொருட்களும் தொடர்ந்து வழங்கப்படுவதாக விமான நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் கறுப்பு மிளகு மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுடன் ஒப்பிடும் போது உயர்ந்த தரம் மற்றும் காரத்தன்மையைக் கொடுக்கும் அதிக “பைப்பரின்” உள்ளடக்கத்தை கொண்டுள்ளது.
முன்னதாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் சிறிய பொதிகளில் மிளகு மற்றும் உப்பை வழங்கியது, ஆனால் வணிக வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவில் இருந்து உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நீக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம், வணிக வகுப்பில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் மிளகு, உப்பு பயன்படுத்தாததால், அந்தப் பொதிகளை கழிவுகளாக வீச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.