அமெரிக்க புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் மீதான தடையை நீடிக்க வேண்டும் : சரத் வீரசேகர
02 Jun,2024
அமெரிக்காவை(America) தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் மீதான தடையை நீடிக்குமாறு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர(Sarath Weerasekara), இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் ஜனநாயக சுதந்திர வாக்கெடுப்பு என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையிலேயே சரத் வீரசேகரவின் கருத்து வெளியாகியுள்ளது.
“உலகின் பல நாடுகள் தடை செய்த உலகின் மிகவும் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை இலங்கை தோற்கடித்த போதிலும், அமெரிக்க அரசாங்கம் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் காரணத்தை நியாயப்படுத்துகிறது.
அமெரிக்க புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் மீதான தடையை நீடிக்க வேண்டும் : சரத் வீரசேகர வலியுறுத்து | Sarath Weerasekhara Wants Ban Tamil Organizations
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர், புலம்பெயர்ந்த தமிழர்களால், பணத்துக்காக வாங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அமெரிக்காவில் உள்ள தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு (The Tamil Americans United Political Action Committee), இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள்( PEARL - People for Equality and Relief in Lanka)மற்றும் உலகத் தமிழர்களின் கூட்டமைப்பு (Federation of Global Tamils) போன்ற அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யவேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.