இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் டொலர் முதலீடு , இராஜாங்க அமைச்சர்
01 Jun,2024
இந்த ஆண்டுக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற முதலீட்டு இலக்கை முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் தெரிவித்துள்ளார்
இதனடிப்படையில், அதானி (Adani) நிறுவனம் மட்டுமே 820 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார்
மேலும், ஏனைய வர்த்தக நிறுவனங்களுடன் 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது