ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது: விஜித ஹேரத் சவால்
30 May,2024
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாதென நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரருமான விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை, பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால் (Palitha Range Bandara) முன்வைக்கப்பட்ட பிரேரணை யாருடையது? என விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.
அத்தோடு ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
மேலும், அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அதனை உறுதிப்படுத்த எவரும் இல்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.