ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்று தப்பிவந்த இலங்கையர்கள் வெளியிட்ட தகவல்
19 May,2024
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் (Russo-Ukrainian War) முனைகளுக்குச் சென்று மீண்டும் இந்த நாட்டிற்கு தப்பிவந்த பல ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் (Sri lanka Army) தங்களின் பயங்கரமான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை அதிக சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்று தருவதாக கூறி நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதிலும் எதனையும் முறையாக பெற்றுக்கொடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொமாண்டோ படைப்பிரிவில் 22 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்று, அந்நாட்டு கூலிப்படையில் ரஷ்யா சென்று இணைந்து இலங்கை திரும்பிய மொனராகலை – தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த லலித் சாந்த, தனது அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“சுமார் 16 பேர் வெவ்வேறு இடங்களில் முன்வரிசையில் அவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் தாக்குதல் நடந்தது, தோள்பட்டை, முழங்கால், உள்ளங்கால் என பல இடங்களில் அடிபட்டு, சுமார் 8 கிலோமீற்றர் தூரம் காலை இழுத்துச்சென்றேன். ஒரு தொழில்நுட்ப போர் நடக்கிறது. அதை சமாளிப்பது கடினம். அவர்கள் கூடாரத்தில் வாழ்வது மிகவும் கடினம்." என கூறியுள்ளார்.