சட்டவிரோதமாமாக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு
08 May,2024
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதினை இலங்கையர்கள் தவிர்க்க வேண்டுமெனவெளிவிவகார அமைச்சரும், அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி(Ali Sabry) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (8) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் இலங்கையர்களை காப்பாற்ற அரசாங்கம் செய்யக்கூடிய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இளைஞர்கள் திறந்த வீசா அல்லது சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு செல்லாமல் செல்லுபடியாகும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்ட அமைப்பின்படி வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.