இலங்கையை நோக்கி ரஷ்ய ஏவுகணை கப்பல்
02 Mar,2024
ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான 'ரஷியன் கார்ட்ஸ் ஏவுகணை குரூஸர் வர்யாக்' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
குறித்த கப்பலானது, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை வரவேற்க இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்தாக கூறப்படுகிறது.
இந்த கப்பல் விஜயத்தின் போது, கப்பலின் கொடி அதிகாரியும் கட்டளை அதிகாரியும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.
உத்தியோகபூர்வ பயணம்
அத்தோடு, இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் அனைத்து கப்பல்களும் பங்கேற்கவும், இலங்யைின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு 2024 மார்ச் 03 அன்று நாட்டை விட்டு வெளியேறவுள்ளது.