100,000 ற்கும் அதிகமான அந்தரங்க வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிர்வு
19 Jan,2024
!
கடந்த ஆண்டில் மட்டும் பல்வேறு நபர்கள் மூலமாக 100,000 க்கும் மேற்பட்ட, சிறார்களின் அந்தரங்க வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
இந்த காணொளிகள் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அவர்களின் நிர்வாணத்தை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இந்தக் காணொளிகளைப் பதிவேற்றியவர்களைக் கண்டறிந்து கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
“விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, மேலும் சில தொழில் வல்லுநர்கள் கூட இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும், இந்த செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இவ்வாறான சம்பவங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த வருடத்தில் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்த உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.