மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் 1334 குடும்பங்கள் பாதிப்பு
17 Dec,2023
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 10 வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நேற்று (16.12.2023) மாலை வெளிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் 941 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேரும், போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 9320 பேரும், மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவிலுள்ள காத்தான்குடி 2ம் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரும் பாதிப்படைந்துள்ளன.
அத்துடன் வாகரையில் 2 வீடுகளும், காத்தான்குடியில் ஒரு வீடும், ஏறாவூர்பற்றில் 7 வீடுகளுமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.